உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் கோழியார் கோட்டை தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா தொடங்கி வைத்தார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , முகம்மது மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான உதவிகளை இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.