செம்பதனிருப்பு ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்

சீர்காழி ஒன்றியம் செம்பதனிருப்பு ஊராட்சியில் பூமி குடும்பம் சார்பில் நிறுவனர்கள் ப. ஜெயக்குமார், ப.சிவசங்கரன் ஆகியோரால் மேலையூர், செம்பதனிருப்பு, பூம்புகார் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட கண் தெரியாதோர், காதுகேளாதோர், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, வேட்டி, புடவை, காய்கறிகள், மருத்துவ செலவிற்கு ரூபாய் 500 நிவாரணம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றியம், செம்பதனிருப்பு ஊராட்சி, மேலையூர் ஊராட்சியின் ராகதீபம் பாரதி, பூமி குழுமம் இளைஞர் நற்பணி மன்றம் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..