தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பதவியேற்பு

தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சண்முகராஜேஸ்வரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து தென் மண்டல ஐ.ஜியாக முருகன் நியமிக்கப்பட்டார்.சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன்உயிரிழப்புகள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் முருகன் தென் மண்டல ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெல்லை கமிஷனராகவும், ஏற்கனவே தென் மண்டல ஐ.ஜியாகவும் பணி புரிந்துள்ளார் என்பதாலும், இந்த பிரச்னையை இவர் சுமூகமாக கையாள்வார் என்பதால், ஐ.ஜி.முருகனை அரசுமீண்டும் தென் மண்டல ஐ.ஜியாக நியமித்துள்ளது என்று கூறப்படுகிறது.இவர் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய போது கிரெடிட் கார்டு மோசடி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் பொருளாதார குற்றப் பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சி.பி.ஐ.யிலும் பணி புரிந்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்