Home செய்திகள் புதுப்பாளையம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்.

புதுப்பாளையம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் அல்லியந்தல் கிராமத்தில் இன்று “சிறப்பு கிராம சபை பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இந்த சபையில் கிராம ஊராட்சி வளர்ச்சி 2022-2023 குறித்த பல்வேறு உரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அல்லியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பொம்மிமுருகன், ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வேளாண் அலுவலர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவல உதவியாளர் மணி, டிஎம் துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் யோபுவிஜயகுமார், அங்கன்வாடி பணியாளர் மதிமொழி மற்றும் அல்லியந்தல் ஊர் பொதுமக்களும், இளைஞர்களும், Dr.A.P.J.அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் தங்களின் கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்த விவாதங்களை முன் வைத்தனர். அந்த விவாதங்களை கோரிக்கைகளாக வாய்மொழி மற்றும் கடிதங்கள் மூலமாக ஏற்றுக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளும் விரைவில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை தீர்மானத்தில் எழுதப்பட்டு விரைவில் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு அடிப்படைத் தேவைகள் விரைந்து நிறைவேற்றித் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com