Home செய்திகள் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..

by mohan

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பள்ளி கல்லூரிகளில் மாணவ,மாணவிகளிடம்பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் மேலகரத்திலுள்ள இம்மானுவேல் பள்ளி மற்றும் St. ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி ஆகியோரின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தங்களுக்கு பள்ளி கல்லூரிகளிலோ அல்லது வெளியிலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ உடனே தெரிவிக்க வேண்டும் அல்லது உடனடியாக 181,1098,14417 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் மாணவிகள் அனைவரும் தங்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆபத்து காலங்களில் காவல் துறையினரின் உதவியை இதன் மூலம் எளிதில் பெற முடியும். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு (IUCAW) காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி, IUCAW சார்பு ஆய்வாளர் இரத்தின பால் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!