செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி மாபெரும் தூய்மை பணி முகாம்; அதிகாரிகள் ஆய்வு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட மாபெரும் தூய்மைப் பணி முகாம் வடகிழக்கு பருவமழை தூய்மை பணி கால்வாய்கள் வடிகால் தூய்மை படுத்தும் திட்டம் செயல்படுத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களின் உத்தரவின் பேரில்செங்கம் பேரூராட்சி உட்பட்ட மதுபான கடை வீதி பஜார் சாலை ராஜகிரி பெருமாள் கோயில் தெரு சிவன் கோவில் தெரு உள்ளிட்ட 18 வார்டுகளில் அமைந்துள்ள வடிகால் தூய்மை செய்யப்பட்ட மழைக்காலங்களில் தெருக்கள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணியானது வரும் 25 வரை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.செங்கம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெறும் தூய்மை பணி முகாம் நடைபெறுவதை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா. இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்ட உதவி செயற்பொறியாளர் மனோகரன், செயல் அலுவலர், ச.லோகநாதன், இளநிலை பொறியாளர் ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.