
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு, சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைப்பேன். மானுட மற்றும் மனிதமாபமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர உறுதியேற்கிறேன் என உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஆசிரியர் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன் அரசு, மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.