அலங்காநல்லூர் அருகே கார் நிலை தடுமாறிஊரணிக்குள் புகுந்ததில் இரண்டு பேர் பலியாயினர்.

மதுரை செல்லூரிலிருந்து- காரில் சிலர் குளிக்க அச்சம்பட்டிக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்க சென்று விட்டு, திரும்பிய போது, அச்சம்பட்டி ஊரணிக்குள், கார் நிலை தடுமாறி புகுந்ததில், காரில் பயணம் செய்த செல்லூரைச் சேர்ந்த அரவிந்தன் 27, சித்திக் 27, ஆகிய இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.மேலும், காரில் பயணம் செய்த கார் டிரைவர் வேல்பாண்டி 27, வீரபாண்டி 27, முத்துப்பாண்டி 27.ஆகிய மூவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்