செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மையத்தின் சார்பில் தூய்மைப் பணி.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப் பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் 1ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் பள்ளிகள் முழுவதும் தூய்மையற்று செடி கொடி குப்பைகள் அதிக அளவில் இருந்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது அவர்களுக்கு அசுத்தமான ஒரு சூழல் ஏற்ப்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருவதாகவும் இதனை முழுவதுமாக தடுப்பதற்கு செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு மையத்தின் பக்தர்கள் சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் காரல்மார்க்ஸ் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து பள்ளிகள் முழுவதும் தூய்மைப்படுத்த அவர்களுக்கு அனைத்து உபகரணங்களையும் உதவிகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார் இதேபோன்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் தரமற்ற நிலையிலும் தூய்மையற்ற நிலையிலும் இருந்து வருவதால் அதனை விரைவில் தூய்மைப்படுத்தி பள்ளி மாணவர்கள் நலன் கருதி இதுபோன்ற தொண்டுகளை தொடர்ந்து செய்து உதவிடுவோம் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் தெரிவித்தனர் இவர்களது சமூக சேவைகளை கண்டு அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது