Home செய்திகள் செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சென்ற மூன்று நபர்கள் திண்ணையில் படுத்திருந்த பெண்ணின் தாலி சங்கிலியை அறுக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்து மேல்செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சென்ற மூன்று நபர்கள் திண்ணையில் படுத்திருந்த பெண்ணின் தாலி சங்கிலியை அறுக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்து மேல்செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல், தீத்தாண்டபட்டு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் விமல் கோவிந்தராஜ் ஆகியோர் மேல்செங்கம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர் அப்போது வனவிலங்குகள் எதுவும் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பிய மூவரும் பக்கரி பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணையில் படுத்திருந்த வேடி அம்மாள் என்ற பெண்ணிடம் அருகில் சென்று கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை தடுத்துள்ளார் அப்போது கண் விழித்துக் கொண்ட வேடி அம்மாள் அவரின் கையை பிடித்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டு உள்ளனர் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மூன்று நபர்களையும் சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து கயிறால் கட்டி வைத்து மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மேல்செங்கம் காவல்துறையினர் மூன்று நபர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தரை காடுகளில் அதிக அளவில் உள்ள மான் மயில் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய உயிரினங்களை சில சமூக விரோதிகள் தினம்தோறும் வேட்டையாடி வருவதாக பலமுறை வனத்துறையினருக்கு புகார் கொடுத்தும் வனத்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருவதால் கள்ளத்துப்பாக்கி உடன் வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற மூவர் வனவிலங்குகள் எதுவும் கிடைக்காத விரக்தியில் படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து வரும் சூழல் உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இரவு நேரத்தில் அடிக்கடி வனப்பகுதிகளில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாகவும் இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் வனவிலங்குகளை வேட்டையாட சென்று வரும்போது செயின் அறுப்பில் ஈடுபட்டார்களா அல்லது கள்ளத்துப்பாக்கி உடன் சென்று பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என மேல்செங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கள்ளத்துப்பாக்கி கையில் வைத்துக்கொண்டு பெண்ணின் கழுத்திலிருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com