Home செய்திகள் அரசு நகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் 11.15 லட்சம் மகளிர் பயணம்தமிழக முதல்வருக்கு பெண்கள் நன்றி.

அரசு நகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் 11.15 லட்சம் மகளிர் பயணம்தமிழக முதல்வருக்கு பெண்கள் நன்றி.

by mohan

தன்னம்பிக்கையுடனும்சுயமரியாதையுடனும் சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மகளிர்நலனுக்காக எண்ணற்ற திட்டங்களைமுத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் செயல்படுத்தினார். 1989ல் தர்மபுரிமாவட்டத்தில் ஆதகம்பாடி என்னும் ஊருக்கு அருகே மாரியம்மன் மகளிர் மன்றம் எனும் பெயரில்மகளிர் சுய உதவிக் குழுவை துவக்கி வைத்தார். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன்சுழல்நிதி, அவர்கள்தயாரிக்கும்பொருட்களைசந்தைப்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் பொருட்காட்சிகள் போன்ற பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டன. அரசு பதவிகளில் பெண்களுக்கு 30 சதவித இடஒதுக்ககீடு, உள்ளாட்சிஅமைப்புகளில் 33 சதவித இட ஒதுக்கீடு, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்போன்ற எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.பரம்பரைசொத்தில்பெண்களுக்கு சம உரிமை அளித்திடும் வகையில் 1990ல் ‘சொத்துரிமை சட்டம்”வழங்கி சரித்திரம் படைத்தார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், மே 7 அன்றுபொறுப்பேற்றவுடன், ‘எல்லோருக்கும் எல்லாம் என்பதே லட்சியம்”; என்ற உயரிய நோக்கத்தோடுதமிழக மக்கள் நலனுக்காக 5 முத்தான திட்டங்களை செயல்படுத்துவதற்கு கோப்புகளில்கையெழுத்திட்டார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு திட்டம், அரசுநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம்,‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”என்ற திட்டத்தின் மூலம் தனித் துறையின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகாணும் திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாமருத்துவ சிகிச்சை ஆகிய 5 முத்தான திட்டங்களை செயல்படுத்த தமிழகமுதல்வரின் உத்தரவின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுசெயல்படுத்தப்பட்டுவருகிறது.அந்தவகையில், பெண்களுக்கு இலவச பயண திட்டத்தின் கீழ் மகளிர் மற்றும் பணிபுரியும்பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ளஅரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும்கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டுவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. நகர் பேருந்துகள் சுமார் 120 வழித்தடங்களிலும்,200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் புறநகர் பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 11,14,662 மகளிர், மாற்றுத்திறனாளிகள் 5,211 பேர், மாற்றுத்திறனாளிகள் உடன் வரும்உதவியாளர்கள் 292 பேர், மூன்றாம் பாலினர் 266 பேர் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மகளில் இத்திட்டத்தின் கிராமம்மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.அதேபோல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம்திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் இடம்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் பயனடைந்த கடலாடிகிராமத்தைச் சார்ந்த பாப்பா தெரிவித்ததாவது:கடலாடி கிராமத்தில் ஸ்ரீ குமரன் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினராகஉள்ளேன். சுய உதவிக் குழுவில் அரசு மானியத்துடன் கிடைக்கப் பெறும் சுழல் நிதிஉதவியுடன்கிராமப்புறங்களில் நடைபெறும் திருவிழாக்களில் சிறுவர்களுக்கான பொம்மை, வளையல் போன்றவிளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். திருவிழா காலங்களில் ஒவ்வொருஊராக பயணம் செய்ய அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்வேன். எனது சிறியவருமானத்திலிருந்து பயண கட்டணமாக மட்டுமே பெரிய தொகை செலவு செய்ய வேண்டியிருந்தது.இதனால் எனது எளிய வியாபாரத்தில் கிடைக்கும் வருமானம், வரவுக்கும் செலவுக்கும் சரியாகஇருக்கும். சேமிப்பு என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது.தற்போது, பெண்களுக்குதமிழக முதல்வர் இலவச பயணத் திட்டம் அறிவித்துள்ளார். இதன் மூலம் பயணத்திற்காக செலவு செய்த தொகை எல்லாம்இப்போது சேமிப்பாக மாறியுள்ளது. இந்த சேமிப்பை எங்கள் குடும்பத்தின் அத்தியாவசியதேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பாக உள்ளது. என் போன்ற ஏழை எளிய மக்களின் தேவையறிந்துஇது போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.தொகுப்புசு.ஜெகவீரபாண்டியன்,

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!