எஸ்டிபிஐ கட்சி ஆர்எஸ் மங்கலம் நகர் சார்பாக EB அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சி ஆர்எஸ் மங்கலம் நகர் சார்பாக இன்று EB அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது ,அதில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. முதலாவது கோரிக்கை மின் கணக்கீடு குளறுபடி நிகழ்வதால் அதனை சரி செய்யவும் ,,இரண்டாவது கோரிக்கை மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப் படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதனை சரி செய்யவும்,, இரவு நேரத்தில் பணியாளர்கள் (வயர் மேன்)நியமிக்க வேண்டியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்து தருவதாக ஆர்எஸ் மங்கலம் ஈபி அலுவலகம் உதவி மின்பொறியாளர் உறுதி அளித்துள்ளார்…மேலும் இம்மனு ஆர். எஸ். மங்கலம் எஸ்டிபிஐ கட்சி நகர் தலைவர் அபுபக்கர் சித்திக்,தலைமையில் நகர செயலாளர் முஹம்மது ஷரீப் அவர்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது