செங்கம் அருகே நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினர் பசுமை வீடுகள் பெற்றுத்தர வேண்டும்;எட்டாம் வகுப்பு மாணவி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் ராவந்தவாடி பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் முருகதாஸ், திருப்பதி, கண்ணதாசன் ஆகிய மூன்று குடும்பத்தினர் கடந்த ஆண்டு நிவர் புயலால் வீடுகள் பலத்த சேதம் அடைந்து இடிந்து விழுந்தது . அந்தப் பகுதியில் இயங்கி வரும் அரசு வாழ்ந்து காட்டுவோம் அலுவலகத்தில் மூன்று குடும்பத்தினர் தஞ்சமடைந்து கடந்த எட்டு மாதங்களாக வாழ்ந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு வாழ்ந்து காட்டுவோம் அலுவலகம் அரசு அதிகாரிகள் கெடுபிடியால் மூன்று குடும்பத்தினரை வெளியேறும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர் இதனால் அந்த மூன்று குடும்பத்தினர் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆதங்கத்தில் உள்ளனர் .இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகதாஸ் மகள் அக்ஷயா எட்டாம் வகுப்பு மாணவி கூறியதாவது என்னுடைய தாத்தா காலத்திலிருந்து குடிசையில் வாழ்ந்து வருகிறோம் நானும் குடிசையில் தான் பிறந்தேன் பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா குடிசை இல்லாத கிராமமாக என்று கூறுகிறார்கள் ஆனால் நாங்கள் இன்னும் குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம் புயலால் எங்கள் வீடு சேதமடைந்து இடிந்து விழுந்துவிட்டது பள்ளிக்குச் செல்லும்போது மாணவர்களும் ஏளனமாக எங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் எங்கள் தாய் தந்தை கூலி வேலை பார்த்து வரும் நிலையில் இந்தநிலை தொடராமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்