செங்கம் பகுதிகளில் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு ;

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சாலையோர பெட்டி கடைகள் முதல் பெரிய மளிகை கடை வரை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே சரவணகுமரன் தலைமையில் செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மேல்செங்கம் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் காவல்துறையினர் ஆங்காங்கே பெட்டி கடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை அனைத்துப் பகுதிகளிலும் அதிரடியாக ஆய்வு செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் இந்நிலையில் செங்கம் பகுதியில் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது