Home செய்திகள் ஹலோ திருவண்ணாமலை – பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது;மாவட்ட காவல்துறை தகவல்

ஹலோ திருவண்ணாமலை – பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது;மாவட்ட காவல்துறை தகவல்

by mohan

வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளதுஇது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி கொண்டு கடந்த 17 2021 அன்று பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே காவல்துறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக குறுஞ்செய்திகள் மூலம் புகார் அளிக்கும் வகையில் திருவண்ணாமலை போலீஸ் 9988 857 666 என்ற சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண்னை தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண் திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த 17.6.2021 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குரல் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வாயிலாக மொத்தம் 791 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 753 புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 23.6.2001 அன்று வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வழியாகப் பெறப்பட்ட புகாரினை அடுத்து திருவண்ணாமலை நகர உட்கோட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயானகுளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்மேலும் சட்டவிரோதமாக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அதன் பேரில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!