திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் பாப்பாத்தி அம்மாள் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் வழக்கறிஞர் பிகே தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்றது மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் எல்ஐசி பல்லுயிர் பாதுகாப்பு தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் கே.இராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த அறக்கட்டளை 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை உறுதி ஏற்றுக்கொண்டு தொடக்க நிகழ்வாக பரமனந்தல் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் முதல்கட்டமாக 2021 மரக்கன்று நடும் திட்டத்தை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் தொடங்கி வைத்து பேசுகையில்;மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. இளைய தலைமுறையினர் சமூக ஆர்வலர் என அனைவரும் மரங்களை நட்டு சமூகத்தை காக்க முன்வர வேண்டும் என்று பேசினார். பின்னர் பரமனந்தல் ஏரி பகுதியில் 1000 பனை விதைகளை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் மற்றும் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் தனஞ்ஜெயன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் ஆகியோர் வீசினர் விழாவில் பி.கே.ஏழுமலை , எஸ்.இமயவர்மன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் பரமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன், ராஜன், விஜயகுமார், குமரேசன், பிச்சாண்டி, கிராம பொதுமக்கள், தன்னார்வலர்கள் ,வன ஆர்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் நிகழ்ச்சியின் இறுதியில் ரீடு தொண்டு நிறுவன பொறுப்பாளர் பி.கே.சேட்டு நன்றி கூறினார்
55
You must be logged in to post a comment.