Home செய்திகள் செங்கம் பணிமனை சார்பில் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டன

செங்கம் பணிமனை சார்பில் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டன

by mohan

தமிழகத்தில் ஊரடங்கு சிலதளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுபோக்குவரத்து கழகங்கள் சார்பில் 60% பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பணிமனை சார்பில் 21 பேருந்துகள் இயக்கப்பட்டது இவற்றில் 9 நகரப் பேருந்துகளும் 12 புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டன.லும், செங்கம் பணிமனை சார்பில் ஊழியர்கள் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை, முகக் கவசம் வழங்குவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருந்தாலும் செங்கம் நகர மக்களிடையே ஒரு அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணம் செல்ல தவிர்க்கின்றனர்.‘‘அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி, பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவீத பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் கரோனா அச்சம் இருப்பதால், வெளியூர்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்த்து குறைந்த பயணிகள் வந்தாலும், தொடர்ந்து பேருந்துகள் பயணிகளுக்கு பாதுகாப்புடன் செல்ல முக கவசம், சனிடைசர் போன்றவை அளித்து வருகின்றோம் பயணிகள் பாதுகாப்போடு இயக்கப்பட்டு வருகின்றன. என செங்கம் பணிமனையின் மண்டல துணைத் தலைவர் கே சண்முகம் தெரிவித்தார். ஓட்டுநர் பயிற்சியாளர் ஆதிமூலம் கட்டுப்பாட்டாளர் சி சண்முகம் தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், விஜயசங்கர், முருகன் ராஜேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com