Home செய்திகள் கலசபாக்கம் பகுதி இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் ;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வேண்டுகோள்

கலசபாக்கம் பகுதி இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் ;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வேண்டுகோள்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு நடைபெற்றது பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் ,பழங்கோயில் மோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசிமுகாமினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தெரிவிக்கையில் ; தமிழக அரசின் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்ற இலவச தடுப்பூசி முகாம் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நோய்த் தொற்றில் இருந்து விடுபட கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் விழிப்புணர்வோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தடுப்பூசி முகாம் பயன்படுத்தி தடுப்பூசி சிலிர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பாமல், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் .நிகழ்வில் திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர் அஜிதா,கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், கலசபக்கம் வட்டாட்சியர் அமுலு, கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் , கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி , கலசபக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ,கலசபக்கம் மருத்துவர் விக்னேஷ், கோதண்டன்,பழங்கோவில் மருத்துவர் தேன்மொழி, நடராஜ், சுந்தரபாண்டி,மோட்டூர் மருத்துவர் அருள்பிரகாஷ் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com