Home செய்திகள் கூடுதல் கட்டுப்பாடுகளால் செங்கம் நகரில் வாகனச் சோதனை தீவிரம்: சாலைகள் வெறிச்சோடியது

கூடுதல் கட்டுப்பாடுகளால் செங்கம் நகரில் வாகனச் சோதனை தீவிரம்: சாலைகள் வெறிச்சோடியது

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில், தமிழக அரசின் கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வாகனச் சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், காய்கறி, மளிகைக் கடைகள், தேநீர் விடுதிகளில் பொதுமக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து. இதன்படி, மளிகை, காய்கறி கடைகள் காலை 6 முதல் 10 மணி வரையில் மட்டுமே செயல்படும் என்றும், தேநீர் விடுதிகள் செயல்படத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செங்கம் நகரில் காவல் துறையினர் சார்பில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் காலை முதலே வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேல்செங்கம் காவல் நிலைய எல்லைக்கு சோதனைச்சாவடி, இரும்புத் தடுப்புகள் வைத்து வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதேபோன்று செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில்இரும்புத் தடுப்புகள் வைத்து வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன், இதே போல் மீண்டும் வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.செங்கத்தில் காலை 6 முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.இந்த நிலையில், மார்க்கெட்டில் விதிகளை மீறி காலை 10 மணிக்கு மேல் செயல்பட்ட கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும், செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட மில்லத் நகர் போளூர் சாலை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய சாலை, பகுதிகளிலும் வாகனப் போக்குவர்த்து காணப்பட்டது. செங்கம் காவல்துறை உதவி ஆய்வாளர் ஏசுராஜ் தலைமையில் தேவையில்லாம சுற்றித்திரிந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com