Home செய்திகள் செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்க சார்பில் கொரோனா விழிப்புணர்வு .

செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்க சார்பில் கொரோனா விழிப்புணர்வு .

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்கா பேட்டையில் செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்க சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசும், பல்வேறு அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு செங்கம் உதவி ஆய்வாளர் ஏசுராஜ் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார். செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் வி.ஆர்.எஸ்.செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் வியாபாரி சங்கத் தலைவர் கே.கே. சத்தார் மற்றும் ஆசை முஷிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தானிய கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.ஆர்.எஸ்.செல்வம் டாக்டர் அம்பேத்கர் சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் காவல் துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டு, முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அவர் பேசுகையில் ; கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை ஒத்துழைப்பு நல்க வேண்டும், ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் . சங்கத்தின் சார்பில் இப்போது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வு நடத்த உள்ளோம் என்று பேசினார். நிகழ்வில் செங்கம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சம்பத், பொருளாளர் திருமால், பாமக, திமுக என அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் அரசுத்துறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைபிடித்து பங்கேற்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com