Home செய்திகள் செங்கம் பகுதியில் தமிழக அரசின் கொரோன தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் சாலைகள் வெறிச்சோடின.

செங்கம் பகுதியில் தமிழக அரசின் கொரோன தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் சாலைகள் வெறிச்சோடின.

by mohan

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துதிருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருகின்ற நிலையில் செங்கம் பகுதியில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலுக்கு வந்தது தொடர்ந்து முதல் நாளான செங்கம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள் பால் பெட்ரோல் பங்க் மற்றும் உணவகங்கள் திறந்து இருந்தபோதிலும் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மேலும் முன் களப்பணியாளர்களுக்கும் மற்றும் அவசர தேவைக்கும் அரசு பேருந்து ஒன்று செங்கம் பேருந்து நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று எச்சரித்தனர். முழு ஊரடங்கு யொட்டி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com