Home செய்திகள் செங்கத்தில் கவிதை நூல் அறிமுக கூட்டம் – எழுத்தாளர்கள் , கலைஞர்கள் பங்கேற்பு

செங்கத்தில் கவிதை நூல் அறிமுக கூட்டம் – எழுத்தாளர்கள் , கலைஞர்கள் பங்கேற்பு

by mohan

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் செங்கம் படைப்பாளர்கள் சங்கம் இணைந்து” நீ முதல் நீ வரை ” கவிஞர் இலக்கியன் கவிதை நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நூல் அறிமுக கூட்டத்திற்கு எழுத்தாளர். முருகன் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது கவிஞர் இலக்கியன் நூல் குறித்து உணர்வுபூர்வமாக எடுத்துக் கூறினார் மேலும் அவர் பல படைப்புகளை படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அனைத்து தரப்பு மக்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை தமது கவிதை மூலம் வழங்க வேண்டும் என்றும் பேசினார். கல்வியாளர் சி.மாணிக்கம் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக சிலம்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பேராசிரியர் பிரேம்குமார் நூலை குறித்து அறிமுகம் உரையாற்றினார். செங்கம் பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன் நூல் குறித்து பேசினார். கவிதை நூல் அறிமுக கூட்டத்தில் கவிதை நூலின் முதல் விற்பனையை தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலைஞர் நான் முத்து வேலன், பூர்ணிமா, தலைமையாசிரியர் காமத், ஆசிரியர் செந்தில்குமார், கோவிந்தராஜ், அச்சுதன், பச்சமுத்து, ஆசிரியர் மணிமாறன், மேல்வணக்கம் பாடி தலைமையாசிரியர் அன்பழகன், தமிழ்மதி கலைச்செல்வி காமாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகள் ரவி, பாரத் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர் இலக்கியன் ஏற்புரை ஆற்றினார். நிகழ்வானது சமூக இடைவெளி கடைப்பிடித்து சிறப்பாக நடைபெற்றது, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com