Home செய்திகள் இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

by mohan

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (ஏப்.,24) காலை நடந்தது. திருக்கோவில் நிர்வாகமானது இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தது பலரும் திருக்கல்யாணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.இத்திருவிழா ஏப்.,15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 26 வரை கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம் குறிப்பிட்ட நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். இன்று காலை 8:45 மணி முதல் 8:50 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.அலங்காரத்தில் அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். கோயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.இன்று பக்தர்கள் வழக்கம்போல் மதியம் 3:30 – மாலை 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். நாளை சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரையும், ஏப்., 26 காலை 7:00 – 10:30 மணி, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 மணி – 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com