Home செய்திகள் செங்கம் அதிமுகவினர் ராசாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கம் அதிமுகவினர் ராசாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்

by mohan

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக செங்கம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிமுக தெற்கு மாவட்ட சார்பில் செங்கம் தண்டராம்பட்டு ஜமுனாமரத்தூர் பய ஆகிய ஒன்றிய செயலாளர்கள் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், ஜானகிராமன் தேவராஜன், எம்.சி.அசோக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஆனந்தன், நகர அம்மா பேரவை செயலாளர் குமார் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே.கே.மணி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனி கண்ணு, வட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதி மேல்பெண்ணாத்தூர் முருகன், முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன், பிரதிநிதி ராஜன் மேல்பெண்ணாத்தூர் ஏழுமலை உட்பட 1000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்ஆ.ராசாவைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்பாட்டத்தில், அவருக்கு கண்டிக்கும் வகையில் ராசாவை கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பிய அதிமுகவினர், அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com