மதுரை பைக்காரா பழங்காநத்தம் அருகே உள்ள சரவணா ஸ்டோர் செல்லும் சாலையில் அரசுபேருந்து தலைகுப்பர கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்தில் பயணித்த 8 பேர் காயம், அதில் இரண்டு பேருக்கு எலும்பு முறிவு. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி மற்றும் திலகர் திடல் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் போராடி பேருந்தை அப்புறவு படுத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து டிப்போவுக்கு சொந்தமான TN58 N-1888 என்ற பேருந்து திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்வதற்காக இரவு 11 மணியளவில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு இப் பேருந்தை ஓட்டுநர் ஜனகர்/50 ஓட்டி வந்துள்ளார் நடத்துனர் சுப்பிரமணி 58 ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பரங்குன்றம் பாலம் அருகே வரும்போது வாகனம் ஒரு மாதிரி நிலை தடுமாறிய வந்துகொண்டு இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர் எதிர்பாராதவிதமாக பழங்காநத்தம் அருகே உள்ள சரவணா ஸ்டோர் செல்லும் சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர், கண்டக்டர் உட்பட 8 பேர் காயமடைந்தனர் அதில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அருகிலிருந்த சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத 108 அவசரகால தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 அவசரகால வாகனம் மூலம் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அரசு பேருந்தானது திருமங்கலம் டிப்போவுக்கு சொந்தமான பேருந்து என்றும் முறையாக பழுது நீக்கப்படாமல் அரசு பேருந்து இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போன்று மூன்று நாட்களுக்குமுன் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் திருமங்கலம் பேருந்து டிப்போவிற்கு சொந்தமான அரசுபேருந்து TN58 N-1510 என்ற பேருந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து அந்த டிப்போவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.