Home செய்திகள் தேனீர் கடையில் தானே தேனீர் தயாரித்து கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய அதிமுக வேட்பாளர் .

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கதை பக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் இறையூர் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பாமக மாவட்ட கழக செயலாளர் பிரசாத் தலைமையில் தாங்கினார் பாமக மகளிர் அணி கஸ்தூரி முன்னிலை வகித்தனர். அந்த பக்கம் அதிமுக வேட்பாளர் பேசுகையில் கலசபாக்கம் தொகுதிகள் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்துள்ளேன் மேலும் தென்மகாதேவமங்கலம் அடிவாரம் பகுதியில் அரசினர் கல்லூரி கொண்டு வருவேன் என்றும் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்வேன் என்று பேசினார். கலசபாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகளில் வி.பன்னீர்செல்வம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.அரசு நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல் தனது சொந்த செலவிலும் பல்வேறு உதவிகளை அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கட்சி பேதமின்றி செய்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்றி வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு கட்சி பேதமின்றி வீடு தேடி சென்று உதவிகள் செய்துள்ளார்.தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வாக்கு சேகரிக்க தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்படி செல்லும் இடங்களில் பெண்களின் ஆதரவு அதிமுக வேட்பாளரான வி.பன்னீர்செல்வத்திற்கு அமோகமாக உள்ளது. வி.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பெண்கள் ஒன்றிணைந்து வரவேற்பு அளித்தும் தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். கலசபாக்கம் தொகுதியில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் செயல்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே ஓட்டு சேகரிப்பின் அம்மாபாளையம் பகுதியில் தேனீர் கடையில் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் தானே இறங்கி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தானே தேனீர் தயாரித்து வழங்கியது கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேட்பாளர் பன்னீர்செல்வம் புதுப்பாளையம் சந்தைமேடு மற்றும் புதிய பேருந்து நிலையம் முக்கிய வீதிகள் வழியாக ஒட்டுக் கேட்டவாறு நடந்து சென்றார். கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுகவின் பலத்தையும் தெளிவாகியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com