Home செய்திகள் ஆலங்குளத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு..

ஆலங்குளத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு..

by mohan

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆலங்குளத்தில்100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூந்து நிலையம் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 ஐ யொட்டி 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 ஐ யொட்டி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி பொதுமக்களிடையே 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் (மகளிர் திட்டம்) மகளிர் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட கோலம் (ரங்கோலி), மாணவர்கள் கையில் வாக்களிப்பது குறித்து அச்சிடப்பட்ட மெகந்தி, சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், சுயஉதவிக்குழு உறுப்பினர் குழந்தைகளின் மனித பிரமிடுகள் மற்றும் தேசத்திற்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடமணிந்து மனித சங்கிலி தொடரின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.முன்னதாக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பொது மக்களிடையே 100 சதவீகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகரன், மாணவ, மாணவியர்கள், மகளிர் சுயஉதவிக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com