திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு மற்றும் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இரு இடங்களில் சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு செல்லும் பைப் லைன் கடந்த 5 தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது பைப்லைன் உடைந்து பல நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் இதனால் குடிநீர் விரயமானதுடன், சாக்கடை நீர் குடிநீரில் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் திருவண்ணாமலை நகரம் பே கோபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்மேலும் இவ்வழியாக பல கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு குடிநீர் பைப் லைன் சரிசெய்யப்பட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்டராம்பட்டு தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏபி திருப்பதி தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் சிகாமணி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சபியுல்லா, திருவண்ணாமலை இளைஞர் அணி டான் சீனிவாசன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
47
You must be logged in to post a comment.