Home செய்திகள் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் ,100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஏழுமலை, கண்ணன், அண்ணப்பன், பாலகிருஷ்ணன் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு 300 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்றும், பேரூராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு விரிவுபடுத்த சட்டத்தை திருத்த வேண்டுமென்றும் விவசாய வேலைகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பயன்படுத்தப்பட வேண்டும், அனைவருக்கும் ஜாப் கார்டு வழங்க வேண்டுமென்றும், சட்ட கூலியை ரூபாய் 250 முழுமையாக வழங்க வேண்டும் என்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி 600 ரூபாய் கூலி வழங்க வேண்டுமென்றும், வறுமைக்கோட்டிற்கு உள்ள அனைவருக்கும் பசுமை வீடு வழங்கிட வேண்டுமென்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகலாதன், வட்ட செயலாளர் லஷ்மணன், மாவட்ட தலைவர் கணபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காமராஜ், தாலுகா செயலாளர் பிரகாஷ், மாவட்டக்குழு குமாரசாமி, ஆறுமுகம், கபிலன், வெங்கடேசன், முபாரக், ராமஜெயம், உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடிவேல் நன்றி கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!