வீதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் – செங்கம் பேரூராட்சி அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி குப்பைகளை பொதுமக்கள், கடைக்காரா்கள் வீதிகளில் கொட்டிவிடுகின்றனா். உணவகங்கள், திருமண மண்டபங்களிலிருந்து உணவுக் கழிவுகள் தெரு முனைகளில் கொட்டப்பட்டு வருகின்றன.மறுநாள் காலை பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வந்து குப்பைகளை சேகரிப்பதற்குள், நாய், பன்றி, மாடுகள் கலைத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.இந்த நிலையில், குடியிருப்புவாசிகள் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை, துா்நாற்றம் வீசுகிறது என்று புகாா் தெரிவிக்கின்றனா்.இதனால் பொதுமக்கள், கடை வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளா்கள் குப்பைகளை வீதியில் கொட்டாமல் தினசரி காலை, மாலை என குப்பை சேகரிக்க வரும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்கவேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் கேட்டுக்கொண்டாா்.