மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவியர்களுக்கு டைட்டன் நிறுவனம் சார்பில் மைண்ட் ஸ்பார்க், கல்வி உபகரணங்கள் ஊராட்சி மன்ற தலைவர் விஜய்வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் கல்வியில் மேம்படுத்துவதற்காக பள்ளியில் பயிலும் 121 மாணவிகளுக்கு டைட்டன் நிறுவனம் மற்றும் நாந்தி அறக்கட்டளையின் சார்பில் மைண்ட் ஸ்பார்க் தொழில்நுட்ப கையடக்க கணினி, புத்தகப் பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை , ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக தன்னார்வலர் ஆசிரியர் சாந்தி நாந்தி அறக்கட்டளையின் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜாராம் மற்றும்சமூக தன்னார்வலர் ஆசிரியர்கள் தமிழ் பூங்கா, ரோஜா, ஜெயலக்ஷ்மி, சாந்தி மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.