Home செய்திகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலும் அம்பேத்கார் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது சுமார் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த குளம் குடிநீருக்கு ஆதாரமாக இருந்து வந்தது இந்நிலையில் குளம் முழுவதும் முழுமையாக சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனை பலமுறை தூர்வாரி குடிநீருக்காகவும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு பயனுள்ளதாகவும் மாற்றித்தர புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர் இது மட்டுமல்லாமல் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது வழங்கப்படும் குடிநீர் கழிவு நீர் கால்வாய்கள் அருகில் இருப்பதால் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் புகுந்து குடிதண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் பலமுறை வயிற்றுப்போக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் புதியதாக சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது நிதியிலிருந்து கட்டப்பட்ட குடிநீர் கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் தண்ணீர் முழுவதும் கெட்டு வீணாகி துர்நாற்றம் வீசி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் தங்களது பகுதிக்கு கால்வாய்கள் அமைத்து தராமல் துர்நாற்றம் வீசும் குடிநீரை சரி செய்து கொடுப்பதில் பாரபட்சம் பார்த்ததாகவும் சட்டமன்ற தேர்தலின்போது வாக்கு கேட்க மட்டும் வரிசை வரிசையாக வந்து செல்வார்கள் தவிர நூறு குடும்பங்கள் வாழும் இந்த பகுதி முழுவதும் தூய்மையற்ற நிலையில் கொசு தொல்லைகள் விஷ ஜந்துகள் அதிகளவில் இருந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனைத்தொடர்ந்து புதிய குயிலம் அம்பேத்கார் நகர் பகுதி மக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதிக்கு அரசு மூலம் ஒதுக்கப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து நோய் நொடி இன்றி வாழ்ந்திடவும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிணறு மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com