கடையநல்லூரில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை உடனே திறக்க வலியுறுத்தல்…

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகள்,சமூக நல அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் செய்து சுலைமான் வரவேற்றார். அதன் பின்னர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது மசூது, திமுக நகர செயலாளர் சேகனா , ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, காங்கிரஸ் கட்சி சார்பில் சண்முகவேல், சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை ,சிபிஎம் ராஜசேகர் ,மாநில விவசாய அணி திமுக துணைச் செயலாளர் அப்துல் காதர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் டேனியல் அருள் சிங் ,மனிதநேய மக்கள் கட்சி மாவட்டட தலைவர் முகமது யாகூப், எஸ்டிபிஐ நகரச் செயலாளர் யாசர்கான், வாழ்வுரிமை கட்சி முகைதீன், மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் சைபுல்லா ஹாஜா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இக்பால் நன்றியுரை ஆற்றினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு விரைவில் கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் விரைவில் திறக்கவில்லை என்றால் வருகின்ற 2-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் கடையநல்லூர் புதிய தாலுகா கட்டிடத்தை திறக்க கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்றார். கூட்டத்தில் பேசிய அனைத்து கட்சியினரும் விரைவில் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தை பூட்டை உடைத்து பொது மக்களே திறப்பார்கள் என சூளுரைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்