குடியரசு தின விழா கொண்டாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் 72 வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது குடியரசு தினவிழாவில் செங்கம் ஆதிதிராவிட தனி வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் விழாவில் விடுதி காப்பாளர் எம்.ஆறுமுகம் அலுவலக உதவியாளர் மணிகண்டன் விடுதி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 72 வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது குடியரசு தினவிழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தலைவர் எஸ்.பி.ராஜன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தலைவர் பிரியங்காகாந்தி மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.செங்கம் தளவாய் நாயக்கன் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ராஜா ,ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.