திருவள்ளுவர் தின விழா – அரசியல் கட்சியினர் , அமைப்பினர் மரியாதை.

2,052ம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் வள்ளுவர் குல மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிறுவன தலைவர் டாக்டர் எம்.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில், செயல்தலைவர் பிரபுநாத சித்தர், மகளிர் அணி தலைவர் ஞானமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.சிவசங்கரன், தண்டபாணி,செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பாரதஜோதி எம்.ஆர்.பாஸ்கரன்,ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ரமணஸ்ரமம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இதேபோல்,திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் இணைந்து திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு ரெட் கிராஸ் தலைவரும், தமிழ் சங்க பொருளாளர் மான தலைவர் அக்ரி.எஸ்.வெங்கடாசலபதி தலைமை தாங்கினார்பிரகாஷ் துணைத் தலைவர் எம் பழனி இணைச்செயலாளர் சீனு பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் தின விழாவையொட்டி மேல் பள்ளிப்பட்டு நெறியாளர் கிருஷ்ணமூர்த்தி திருக்குறள் ஓதினர். ஸ்ரீ ராமகிருஷ்ண பல்லயன் தலைவர் பாண்டுரங்கன் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். அதே வளாகத்தில் உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு வழக்கறிஞர் கஜேந்திரன் மாலை அணிவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். செங்கம் வட்ட தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,ரெட்கிராஸ் பொருளாளர் ஆதவன், தமிழ் சங்க செயலாளர் அசோக்குமார், அரிமா சங்கத் தலைவர் சங்கர், வழக்கறிஞர் செல்வம் தலைமையாசிரியர் பழனி, ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சி.மாணிக்கம், செங்கண்மா முருகு, கோவிந்தராஜன், செல்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நிர்வாக செயலாளர் சர்தார் ரூஹூல்லா நன்றி கூறினார் இதனை தொடர்ந்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந் நிகழ்வில் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். செங்கம் தொகுதி வளையாம்பட்டு , ரெட்டியார்பாளையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.