சங்கராபுரத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் .

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரம் ஏ எஸ். எம் தோட்டப் குடியிருப்பில் பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1989ஆம் ஆண்டு முதல் 1991 வரை ஆசிரியப் பயிற்றுனர் மாணவர்களாக பயின்று வந்தனர். தற்போது திண்டுக்கல்,தேனி, சென்னை,கன்னியாகுமரி உள்ளிட்ட 30 மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாகச் சேர்ந்து காணும் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். அப்போது கலக்கலான ஆட்டம் ,பாட்டம், கொட்டு முரசு மற்றும் பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளோடு பொங்கல் வைத்து நண்பர்களுக்குள் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழைய ஆசிரிய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் வில்லியம்ஸ் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் தமிழக கலாச்சாரத்தின் ஒன்றாக காணும் பொங்கல் வெகு சிறப்பாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது .இருப்பினும் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1989 ஆம் ஆண்டு 40 மாணவர்கள் ஒன்றாக ஆசிரிய பயிற்றுனர்களாக அன்று படித்து இன்றைக்கு கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள 30 மாவட்டங்களிலும் ஆசிரியர்களாக அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறோம். தமிழக கலாச்சாரத்தின் காணும் பொங்கலை முன்னிட்டு நண்பர்கள் அனைவரும் பழைய மாணவர்களாக இருந்து இன்றைக்கு ஆசிரியர்களாக உயர்வு பெற்று இருந்தாலும் பழைய நண்பர்களாக சந்தித்து 30 ஆண்டுகள் அனுபவம், 30 ஆண்டு காலபழக்க ,வழக்கத்தையும் கடந்து வந்த பாதைகளையும் நண்பர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து இந்த பொங்கல் பண்டிக்கையையும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம் என்று முதல் முயற்சியாக இப்பணியைச் செய்து தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா