
திருவண்ணாமலை தேமுதிக மாவட்ட புதிய அலுவலக அருகில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குமாவட்ட கழக செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்டக் கழகப் பொருளாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருவண்ணாமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். கழக கேப்டன் மன்ற துணைச் செயலாளர், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளருமான ராஜ சந்திரசேகர் கலசப்பாக்கம் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் கலசபாக்கம் தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் பிஎம் நேரு தேர்தல் பணியின் போது கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளரும் திருவண்ணாமலை தொகுதி பொறுப்பாளர் தமிழன்னை பாபு, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பொறுப்பாளர் சங்கர், செங்கம் தேர்தல் பொறுப்பாளர் சிவசங்கர், கலசபாக்கம் தொகுதி பொறுப்பாளர் வான்மதி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாவட்ட அணி செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.