
திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, குழந்தைகள் தோட்டம் 11-ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வேலூா் ரூசா சிஎம்சி நிறுவன மருத்துவா் தாசையன் தலைமை வகித்தாா். வேலூா் சமூக சேவைச் சங்கத்தின் திட்ட அலுவலா் பேட்ரிக் ரோசாரியோ, திருவண்ணாமலை சமூக சேவை சங்கத்தின் திட்ட அலுவலா் இன்பசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் வரவேற்றாா்.திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். மேலும், சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலையையும் அவா் வெளியிட்டாா். இதை மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் பெற்றுக்கொண்டாா்.தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சினம் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவா் ஸ்டாலின், பிரசாத் ராஜ் மற்றும் 150 மாணவ, மாணவிகள், 100 மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.
You must be logged in to post a comment.