அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ;

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் நடந்த அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் பேசினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ,வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தூசி கே. மோகன், கலசபாக்கம் எம் எல் ஏ வி.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் உட்பட பலரும் உடன் இருந்தனர். செய்யார் நகரம் மற்றும் செய்யார், வெண்பாக்கம், அனக்காவூர் ஆகிய 3 ஒன்றிய அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் தெள்ளார் டி.பி. மணி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன் முன்னிலை வகித்தனர். மண்டல பொறுப்பாளர் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், வேலூர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி, செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் மற்றும் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் எம். மகேந்திரன் உட்பட்டோர் பலரும் பங்கேற்றனர். அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசுயதாவது: என்றைக்கும் மக்கள் மனதில் நிற்கும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக சந்திக்கும் முதல் பொது தேர்தல் இது .வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது. மக்கள் மனதில் ஜெயலலிதா வரையிலான அரசின் சாதனங்களை இடம் பிடிப்பதை திமுகவினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்ப ஆட்சியில் வந்தவாரிசு உதய நிதி வாய்க்கு வந்ததை உளறுகிறார். அதிமுகவில் பொறுப்புகளுக்கு வந்துள்ளவர்கள் மீண்டும் ஆட்சி அமைய அயராது பாடுபடவேண்டும். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க வேண்டும் வேண்டும் என்று தொண்டர்களுக்கு தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகாவது எப்படியும் ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்று வெறி கொண்டு திமுகவினர் வேலை பார்க்கிறார்கள். அரசின் நல்ல சாதனைகளால் மக்கள் ஓட்டு நமக்குத்தான் என்று வெற்றி மிதப்பில் நம் இருந்து விடக்கூடாது கூடாது அயராத பாடுபட வேண்டும் என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.