
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி சீலக்காரியம்மன் கோவில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு கிராம மக்கள் கண்டெடுத்தனர்.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனுக்கு தகவல் அளித்தனர்.காந்திராஜனுடன் இந்த கல்வெட்டை மதுரை தொல்லியத்துறை அலுவலர் ஆசைத்தம்பி, மதுரை அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து தமிழி எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டு என்பதை உறுதி செய்துள்ளனர்.மேலும் மூன்று வரிகள் கொண்ட தமிழி எழுத்துக்கள் உள்ளதாகவும், சில இடங்களில் வரிகள் சிதைந்து இருப்பதால் இதை நகல் எடுத்து முழுமையாக ஆய்வு செய்யும் முயற்சசியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதுமாக 40 தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ள சூழலில் மதுரையில் மட்டும் 20 தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த கல்வெட்டு தமிழகத்தில் கண்டறியப்பட்ட 41வது தமிழி எழுத்து அடங்கிய கல்வெட்டு எனவும்,பெரும்பாலும் சமணர்கள் குகைகளில் மட்டுமே காணப்பட்ட தமிழி எழுத்துக்கள் சமீபகாலமாக பிற இடங்களிலும் காணப்படுகின்றன, குறிப்பாக புள்ளிமான்கோம்பை, தாதம்பட்டி மற்றும் கின்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து இந்த கொங்கபட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது. உசிலம்பட்டிப் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் வரலாற்று எச்சங்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இது பற்றி விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.