கடையநல்லூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்;மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கல்

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள பொது மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.தமிழக அரசு உத்தரவின் படி மக்களை தேடி அரசு என்று முதல்வர் அறிவித்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். அதன் பின் பொதுமக்களிடம் 449 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் நேர்முக உதவியாளர் (நில அளவை) ஷேக் தாவூத், கடையநல்லூர் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், சமூகநலத்துறை வட்டாட்சியர் கங்கா, நகரத் திட்ட வட்டாட்சியர் தனி திருநாவுக்கரசு, துணை வட்டாட்சியர்கள் செல்வகுமார், ஞானசேகரன், கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொறுப்பு குமார் சிங் நகராட்சி பொறியாளர் சுரேஷ் உதவி பொறியாளர் முரளி, சுகாதார ஆய்வாளர் நாராயணன், உதவி ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கிராம வருவாய் உதவியாளர்கள், தீயணைப்புத் துறையினர் மருத்துவத் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்