Home செய்திகள் செங்கம் பகுதிகளில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கிவைத்தார்.

செங்கம் பகுதிகளில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கிவைத்தார்.

by mohan

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் மூன்றாயிரத்து 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் மற்றும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமம் மற்றும் மலைவாழ் மக்களுக்கு கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக, கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கூட்டுறவு உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதன் அடிப்படையில், மேல்ரவந்தவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அங்குள்ள 10 கிராமங்களுக்கு அம்மா நகரும் நியாய நியாயவிலைக் கடை வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மாவட்ட உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தேமுதிக ஒன்றிய உறுப்பினர் லட்சுமி சக்திவேல் ஆகியோரின் முன்னிலையில் இதனைச் செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி தொடங்கிவைத்தார்.செங்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களையும், மகளிர் குழுக்களுக்குத் தொழில் கடன்களையும் வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com