Home கட்டுரைகள் ஊனமின்றி கையேந்தும் உலகத்தில்… கண்ணில்லாமல் இளநீர் தொழில் செய்யும் அற்புத மனிதர் ராஜா ஒரு முன்னுதாரணம்…

ஊனமின்றி கையேந்தும் உலகத்தில்… கண்ணில்லாமல் இளநீர் தொழில் செய்யும் அற்புத மனிதர் ராஜா ஒரு முன்னுதாரணம்…

by ஆசிரியர்
மதுரையில் பி.டி ஆர் சாலையை கடந்து செல்பவர்கள் ராஜா எனும் தன்னம்பிக்கையுடன் இளநீர் வியாபாரம் செய்யும் இவரை பார்க்காமல் இருந்திருக்க முடியாது.  ராஜா மதுரை ஊமச்சிகுளத்தை சார்ந்தவர்.  சிறு வயதிலேயே மின்னல் தாக்கி இரு பார்வைகளையும் நிரந்தரமாக இழந்தவர்.  இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இருவரையும் கல்விக்காக தன் சகோதரியின் அரவணைப்பில் வளர்த்து வருகிறார். தன்னுடைய இரண்டு கண்களை இழந்தாலும் அடுத்தவர்களின் தயவை நாடி இருக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் இளிநீர் வியாபாரம் செய்து வருகிறார்.  நல்ல பார்வை உள்ளவர்களே இளநீர் வெட்ட தடுமாறும் போது இரு கண்களும் இல்லாமலே இலாவகமாக இளநீரை வெட்டி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்.  ஆனால் அவரை கூர்ந்து அருகில் சென்று பார்த்தால் மட்டுமே அவர் பார்வையில்லாதவர் என்பதை நாம் அறிந்து கொள்ள  முடியும்.
ஆனால் அவர் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்ட பொழுது நம் கண்களில் நீர் வந்து விடுகிறது.  இந்த நாட்டில் லஞ்சம் வாங்கும் ஊழல்வியாதிகளுக்கு ஊனமுற்றோரும், ஊனம் இல்லாதவர்களும் ஒன்றே அவர்களுக்கு தேவை பணம் மட்டும்தான்.  இந்த இளைஞர் ஆரம்ப காலத்தில் சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வேலையில் இடத்தை காலி பண்ண இரண்டு காவல் துறையினர் தொல்லை கொடுத்துள்ளனர் பின்னர் அச்சயமத்தில் மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்திற்கு புகார் மனு கொடுத்துள்ளார்.  பின்னர் ஆட்சியரே நேரடியாக தலையிட்டு தொல்லை கொடுத்த இரண்டு காவல் துறையினரையும் பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி அந்த இடத்திலேயே தொழில் செய்வதற்கு வழி செய்துள்ளார்.
அதே போல் அவருடைய சொந்த ஊரான ஊமக்கிகுளத்தில் அவருடைய நிலத்திற்கு பட்டா வாங்க சென்ற பொழுது பணியில் இருந்த தாசில்தார் இந்த இளைஞரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.  அப்பொழுதும் ஆட்சியர் சகாயமே தலையிட்டு தாசில்தாரை பணி நீக்க செய்ததுடன் பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளர்.  இது சம்பந்தமாக அச்சமயத்தில் அனைத்து முன்னனி பத்திரிக்கைகளிலும் இவரைப் பற்றிய செய்தி வந்தது குறிப்பிடதக்கது. லஞ்சமும் ஊழலும் நிறைந்திருக்கும் இந்த நாட்டிலே மனிதாபிமானம் என்பது ஆட்சியளர்களிடம் சுத்தமாக மறைந்து விட்டது என்றே கூறலாம்.
 
திடகாத்திரமாக இருக்கும் நபர்களே பல பேரின் உதவியுடன் காரியங்களை சாதித்துவிட்டு நமக்காக மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஏளமனம் பேசும் இந்த உலகில் இந்த ராஜா பெயரில் மட்டுமல்ல நிச்சயமாக ராஜாதான்.. நாமும் வாழ்த்துவோம்..
தகவல் உதவி:- பசீர் மரைக்கா, கீழக்கரை நகர் நல இயக்கம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!