Home கட்டுரைகள் உயிரை பலி வாங்கும் புளூ வேல் (BLUE WHALE) என்ற ஆன்லைன் விளையாட்டு…

உயிரை பலி வாங்கும் புளூ வேல் (BLUE WHALE) என்ற ஆன்லைன் விளையாட்டு…

by ஆசிரியர்

உலக அளவில் சிறுவர்களை தற்கொலை செய்ய தூண்டிய புளூ வேல் என்ற ஆன் லைன் விளையாட்டு இந்தியாவிலும் விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் புளூ கேம் விளையாட்டு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 29 அன்று மும்பை அந்தேரி பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அதே போன்று மேற்கு வங்க மாநிலம் மெக்னாபூரில் 10 ஆம் படிக்கும் மாணவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டான். இதே போன்று கேரளாவை சார்ந்த மனோஜ் என்ற 17 வயது மாணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது போன்ற பல அடுகடுக்கான இது போன்ற தற்கொலை சம்பவங்கள் அனைவரிடமும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களுக்கு புளூ வேல் ஆன்லைன் விளையாட்டு தான் காரணம் என்ற செய்தி பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆன்லைன் விளையாட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவை சார்ந்த பிலிப் புடாகின் என்ற 22 வயது உளவியல் மாணவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேஸ்புக்,வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் மூலம் சிறுவர்களுக்கு அறிமுகமாகும் இந்த விளையாட்டு அவர்களை அடிமையாக்கி வருகிறது. நள்ளிரவில் பேய் படம் பார்க்க சொல்லுவது, கையை பிளேடால் கிழித்துக் கொள்ள சொல்வது, மொட்டை சுவற்றில் மீது ஏறி நின்று பாடல் கேட்க சொல்வது உள்ளிட்ட விபரீத கட்டளைகளை சிறுவர்களுக்கு புளூ வேல் பிறப்பிக்கின்றது. இதனை செய்து முடிக்கும் போட்டியாளர்கள் அவற்றை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இனையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதும் புளூ வேலின் விதியாக உள்ளது. மேலும் கண்ணை மூடிக் கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் படிப்படியாக நிலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இறுதியான சவால் என்ன என எதிர்பார்த்து கொண்டிக்கும் போது அது தற்கொலையை சந்திக்கும் சவாலாக இருக்கும். தற்கொலை செய்ய மறுத்தால் ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்ற பேராபத்தே உண்டாகும். மிக ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது அப்போது தான் சிறுவர்களுக்கு புரியும். ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் அவர்களுக்கு தெரியாமல் கணினி அல்லது மொபைலில் “ட்ரோஜன் வைரஸ் ” அனுப்பிவிட்டு சவாலை சந்திக்க மறுத்தால் அந்தரங்க தகவல்களை கசியவிடுவோம் என மிரட்டுவார்கள். இதற்கு பயந்தே அநேக வாலிப சிறுவர்கள் தற்கொலை க்கு ஆளாகிறார்கள்.

இந்த போட்டியில் விளையாடி இது வரை 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.புளூ வேலை உருவாக்கிய பிலிப் புடாகினை கடந்த வருடம் ரஸ்ய போலிசார் கைது செய்த பிறகும் தானாகவே இயங்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் தொழில் நுட்ப நிறுவனங்கள் திணரும் நிலையில் நாள்தோறும் சிறுவர்கள் பலியாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மனிதர்களின் உதவிக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் மனிதர்களை அழிக்க துவங்கியிருப்பதன் முதல் கட்டமே இந்த புளூ வேன என தொழில் நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இணைய தள விளையாட்டுகள் பிள்ளைகளை சிந்திக்க விடாதபடி அடிமையாக்கவும்,அநேக கேடான நிலைக்கு கொண்டு போகின்றது என அநேக கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் மூலமாக நாம் அறிந்ததே!!!

பெறரோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வயதுக்கு மீறிய செல்போன்களை வழங்காமல் இருப்பதன் மூலம் இது போன்ற இணையதள ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com