Home செய்திகள் திருப்புல்லாணி அருகே எல்.கருங்குளம் கிராமத்தில் வீடுகள் தோறும் முருங்கை விதை நடவு பணி..

திருப்புல்லாணி அருகே எல்.கருங்குளம் கிராமத்தில் வீடுகள் தோறும் முருங்கை விதை நடவு பணி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.27- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  அருகே எல்.கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறையின் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடாக திருப்புல்லாணி, மண்டபம், கமுதி வட்டாரங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் முருங்கை விதை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முருங்கை விதைகளை நடவு செய்வதன் மூலம் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகையின்றி ஆரோக்யமான உடல் நலத்துடன் குழந்தைகளை பெற்றெடுக்க உதவும் வகையிலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்கும் விதமாக முருங்கை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு . நடவு செய்யப்படும் விதைகளை முறையாக பராமரித்து பயன்பெற பயனாளிகளுக்கு அறிவுறித்திடும் வகையிலும் அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்திடும் வகையிலும் அங்கன்வாடி பணியாளர்கள், சமூக நலத்துறை களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து பராமரித்திடும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார். மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com