நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லை வந்த துணை ராணுவம்..

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையின் ஒரு கம்பெனி வீரர்கள் 16.03.19 சனிக்கிழமை அன்று உதவி கமாண்டர் அஜய் ஆனந்த் தலைமையில் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபறும் நிலையில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 2,979 வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை என இரண்டாக பிரிக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து, வாகன தணிக்கையை காவல்துறையினர் அதிகரித்துள்ளனர்.

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82 வீரர்கள் உதவி கமாண்டர் அஜய் ஆனந்த் தலைமையில் திருநெல்வேலிக்கு வந்தனர்.

பாதுகாப்புப்படை வீரர்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றவும், நேர்மையாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தி முடித்திட ஒத்துழைப்பு அளித்திடவும் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்