கீழக்கரையில் தொடரும் நீர்பந்தல் நிகழ்வுகள்..

இன்று (4-5-17 )கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் அஷ்ரப் தலைமையில் சர்பத் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு இருந்தது. இந்த நிகழ்ச்சியை காவல் துறை ஆய்வாளர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார், அவருடன் துணை ஆய்வாளர் பாண்டிசெல்வி கலந்து கொண்டார். இந்த மோர் பந்தல் ஒருங்கிணைப்பு மேற்கு கிளை நிர்வாகிகள் அம்ஜத், சைய்து ஹசன் மற்றும் பாசித் மற்றும் தெற்கு கிளை செயலாளர் காதர் மற்றும் தொகுதி இ.செயலாளர் சித்திக் ஆகியோர் செய்தனர்.

மோர் பந்தல் நிகழ்ச்சியில் து.தலைவர் மற்றும் இ.செயலாளர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயர்வீரர்களும் SDPI கட்சியின் வடக்கு,கிழக்கு,தெற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் 210 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பயணடைந்தனர்.