கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்று (04-05-2017) PAD தொண்டு நிறுவனம் சார்பாக வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் PAD தொண்டு நிறுவனத்தின் இளைஞர் வளர்ச்சி அலுவலர் தேவ் ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியின் நோக்கத்தை அந்நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மன்னார்மன்னனும், ஊக்க உரையை நிறுவனத்தின் செயலாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்புரையை சதக் கல்லூரியின் டீன் முனைவர் முகமது சஹபர் மற்றும் செய்யது ஹமீதா அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் முதல்வர் முனைவர் ரஜபுதீன் ஆகியோர் வழங்கினர். மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டேனிங் பாயின்ட் நிறுவனத்தைச் சார்ந்த அண்டோ சேவியர் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வியில் உள்ள பாடப் பிரிவுகள் மற்றும் என்ன படிக்கலாம் என்று விளக்கினார். அதைத் தொடர்ந்து அவினாசி CSED நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லீஸ்வரன் வளரிளம் பெண் குழந்தைகளின் தொடர் கல்வியின் அவசியம் பற்றி விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக PAD தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முனியராஜ் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
You must be logged in to post a comment.