கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்…

கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையராக வசந்தி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார்.  இவர் முன்னர் கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

இதற்கு முன்னர் அரசியல்வாதிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் சந்திரசேகர் பொறுப்பு ஆணையராக பணியாற்றி மக்கள் எளிதாக அணுகக்கூடியவராகவும், மக்களின் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க கூடியவராகவும் இருந்தார். அவர் ஆற்றிய பணிக்கு இத்தருணத்தில் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.