தொடரும் தண்ணீர் பந்தல்.. மக்கள் தாகம் தீருமா??

கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கீழக்கரை தாலுகா அலுவலகம் தாசில்தார் K.M.தமிம் ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு. சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளார் பி.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் கிருஷ்ண மூர்த்தீ மற்றும் ராமநாதபுர ஜமாலியா ஜூவல்லர்ஸ் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI தெற்க்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 350க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

#Paid Promotion